2 பேர்.. 48 பாட்டில்.. எங்கிருந்துடா வர்றீங்க?..! உடல் முழுவதும் சரக்கு பாட்டிலை வைத்து டேப் சுற்றி கடத்திய புள்ளிங்கோஸ்..! - Seithipunal
Seithipunal


நூதன முறையில் மதுபானங்களை கடத்தி வந்த 2 இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர மாவட்டங்களை 3 வகையாக பிரித்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், திருப்பூர், நாமக்கல், கோவை, கரூர் உட்பட 11 மாவட்டங்களில் கடந்த வாரம் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. 

இதில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அருகேயுள்ள புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானங்கள் வாங்கி வரப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், மாலை 5 மணிவரை மட்டுமே மதுபான கடைகள் திறந்திருக்கும் என்பதால், 5 மணிக்கு மேல் மதுபிரியர்கள் திருட்டுத்தனமாக மதுபானத்தை வாங்கி அருந்தி வருகின்றனர். 

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் காரைக்காலில் இருந்து மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கச்சனம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது, இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில், அவர்களின் தோற்றத்திற்கும் உடல் அளவுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்துள்ளது. மேலும், காவல் துறையினரின் கேள்விகளுக்கு முரணான பதில் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை அழைத்து முதுகில் கை வைத்து பார்த்தது போது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர் சத்தம் போன்று வினோதமாக சத்தம் கேட்டுள்ளது. 

இதனையடுத்து, இளைஞர்களின் மேல் சட்டையை கழற்றி சோதனை செய்கையில், உடலில் மதுபானங்களை வைத்து டேப்பால் ஒட்டி கடத்தி வந்தது அம்பலமானது. இவர்கள் இருவரிடம் இருந்து மொத்தமாக 48 மதுபானங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அங்குள்ள கலப்பால் பகுதியை சார்ந்த ரமேஷ் மற்றும் மனோகர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Thiruthuraipoondi youngsters Arrest by Police Liquor Smuggling 4 June 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->