#திருவாரூர் || அரசு ஊழியரின் லஞ்சத்தால் பறிபோன இளைஞரின் உயிர்.! வீடியோ வெளிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லஞ்சம் வாங்கிக்கொண்டு, இழுத்தடிப்பு செய்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கமுதகுடியைச் சேர்ந்த லதா என்பவர், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்தார். 

அவர் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் வீடு கட்ட அரசு நிதி வழங்க வேண்டும். லதாவின் வீடு கட்டும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட நிதியுதவியை வழங்கும்படி அப்பகுதியின்  பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரனிடம், லதாவின் மகன் மணிகண்டன் கோரியிருக்கிறார். 

ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி மூன்றாம் கட்ட நிதியுதவியை வழங்க மகேஸ்வரன் மறுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் ரூ.5,000 கூடுதல் கையூட்டு வழங்கினால் தான் நிதியுதவி வழங்க முடியும் என்று கூறி மணிகண்டனை மகேஸ்வரன் மனா உளைச்சலாக்கு ஆளாகியுள்ளார்.

இதனால், விரக்திக்கு  ஆளான மணிகண்டன் விஷம் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்குமுன் தனது தற்கொலைக்கான காரணத்தை விடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், லஞ்சம் வாங்கிய மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur kamuthakudi young man suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->