அரசு பேருந்தை அடித்து நொறுக்கிய வேன் ஓட்டுநர்.. சினிமா பாணியில் மாஸ் காண்பித்த அரசு பேருந்து ஓட்டுநர், பயணிகள்.! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்தை வேன் ஓட்டுநர் அடித்து நொறுக்கியதால், பயணிகளோடு வேனை அரசு பேருந்து ஓட்டுநர் துரத்தியதால் பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

திருவாரூரில் இருந்து நாகூர் நோக்கி அரசு பேருந்து பயணம் செய்தது. இந்த பேருந்து காரையூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு சமயத்தில், அரசுப்பேருந்தை முந்திச்சென்ற வேன், பேருந்தின் மீது லேசாக உரசியிருக்கிறது. 

இந்த சம்பவத்தில் வேனின் பக்கவாட்டு கண்ணாடிகளும் உடைந்த நிலையில், ஆத்திரமடைந்த வேன் ஓட்டுநர் அரசு பேருந்தை தனது வாகனத்தின் சைக்கிள் வைத்திருந்த கட்டையால் அடித்துள்ளார். மேலும், பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து இருக்கிறார். 

பின்னர், வேனை நாகூர் நோக்கி இயக்கிய நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்று பேருந்தில் பயணிகளுடன் வேனை துரத்தியுள்ளார். இதனால் வேன் ஓட்டுனரும் வாகனத்தை வேகமாக இயக்க, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தை தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் வேனில் இருந்தவர்களை பிடித்து வைத்து, வைப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வேனில் இருந்த கோவையை சார்ந்த 2 சிறுவர்கள் உட்பட 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறையினரின் பேச்சுவார்த்தையில் வேன் ஓட்டுநர் கவனக்குறைவாக செயல்பட்டு முதலில் பேருந்தின் பக்கவாட்டில் மோதியதை ஒப்புக்கொண்ட நிலையில், அரசு பேருந்தை சேதப்படுத்தியதையும் ஒப்புக்கொண்டார். மேலும், அரசு பேருந்துக்கு ஆகும் செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, இருதரப்பிடமும் சமாதான பேச்சுவார்த்தையை முடித்து வைத்த அதிகாரிகள், பணம் வழங்கப்படாத பட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என வேன் ஓட்டுநர் மற்றும் வேனில் வந்தவர்களை எச்சரித்து, முகவரிகளை சேகரித்து அனுப்பி வைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Govt Bus Attacked by Van Driver and Others Police Investigation Cinematic Chasing by Govt Bus Driver


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->