வங்கியில் இருந்த நகைகளை திருடி நாடகமாடிய வங்கி ஊழியர்கள்!! வசமாக சிக்கிய பின்னணி!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் எதிரில் உள்ள சன்னதி தெருவில் இயங்கி வரும் கரூர் வைசியா வங்கியில் நகை கடன், விவசாய கடன் உட்பட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மாதத்திற்கு இரு  முறை வாடிக்கையாளர் அடகு வைத்த தங்க நகைகள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபார்ப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த மே மாதம் வங்கியில் இருந்த தங்க நகைகளை சரிபார்க்கும் போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகள் அடங்கிய 40 பாக்கெட்கள் கணக்கில் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் வராத நகைகளின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாயாகும். இதனை அடுத்து வங்கியில் வைக்கப்பட்ட நகைகள் மாயமானது குறித்து விழுப்புரம் கோட்ட முதன்மை மேலாளர் முரளி கடந்த ஜீன் மாதம் 4 ஆம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

வங்கியின் முதன்மை மேலாளர் முரளி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றவியல் காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த வங்கியில் பணிபுரிந்து வந்த முதுநிலை மேலாளர் சுரேஷ், நகை கடன் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பாளர் சாந்தனஅரிவிக்னேஷ் மற்றும் லாவண்யா, தேன்மொழி, இசைவாணி, கார்த்திகேயன், மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வங்கியில் உள்ள அனைத்து நகைகளுக்கு இந்த 7 பேரும் தான் பொறுப்பு என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையின் போது அனைவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த 7 பேரும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரணை செய்த குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் பிரபு 7 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvanamalai bank staff


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->