பாமக பிரமுகர், மனைவி மாயமான வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.. சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


பாமக பிரமுகர் மற்றும் அவரது மனைவி மாயமான வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டு, அவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பாரதியார் தெரு பகுதியை சார்ந்தவர் சஞ்சீவி ரெட்டி (வயது 68). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியில் பிரமுகரான இருந்து வருகிறார். இவரது முதல் மனைவி சரஸ்வதி உயிரிழந்த நிலையில், மாலா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சஞ்சீவி ரெட்டியின் முதல் மனைவிக்கு 45 வயதுடைய ஜோதி என்ற மகளும், 42 வயதில் ஜெயகாந்தன் என்ற மகனும் உள்ளனர். 

ஜோதியின் மறைவுக்கு பின்னர் சகோதரர் ஜெயகாந்தன் வெளியூரில் வசித்து வரும் நிலையில், சஞ்சீவி ரெட்டி தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சஞ்சீவி ரெட்டி - மாலா ஆகியோரை காணவில்லை என்று அவரது தம்பி பாலு திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சஞ்சீவி ரெட்டி பைனான்ஸ் தொழில், சீட்டு பிடிப்பது, வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற தொழிலை கடந்த 30 வருடமாக செய்து வந்ததால் தொழில் போட்டியால் கடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், வீட்டில் மேற்கொண்ட சோதனையில் பீரோவில் உள்ள நகைகள் மற்றும் பணம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டது உறுதியானது. பீரோவில் இருந்த 150 சவரன் நகைகள், ரூ.50 இலட்சம் ரொக்க பணம், ரூ.5 கோடி மதிப்பிலான ஆவணங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, அங்கு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்கையில், சஞ்சீவி ரெட்டியின் மைத்துனர் மகன் ராபர்ட் என்ற ரஞ்சித் சஞ்சீவ ரெட்டி - மாலாவை கடந்த 29 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே அழைத்து சென்றது தெரியவந்தது. ஒவ்வொரு சி.சி.டி.வி கேமிராவாக ஆய்வு செய்கையில், இருவரையும் கடந்து ஆந்திர பிரதேசத்திற்கு அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதனால் ரஞ்சித்தை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சித்தின் அத்தை மாமா முறையில் இருந்த சஞ்சீவி ரெட்டி - மாலா ஆகியோரை சம்பவத்தன்று ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள புத்தூர் அப்பழகுண்டா பெருமாள் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கூட்டாளிகளான விமல் ராஜ் மற்றும் ரஞ்சித் குமார் மற்றொரு காரில் சென்ற நிலையில், இராமச்சந்திராபுரம் காட்டுப்பகுதியில் செல்கையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி சஞ்சீவி ரெட்டி - மாலாவை கொலை செய்துள்ளனர். 

பின்னர், இருவரின் உடலையும் காட்டுப்பகுதியில் குழிதோண்டி புதைத்ததும் விசாரணையில் அம்பலமானது. பின்னர் வீட்டிற்கு வந்து பேரவை உடைத்து அதில் இருந்த பணம், நகை, சொத்து ஆவணங்கள் போன்றவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவர்களின் தகவலின் பேரில் இருவரின் சடலத்தையும் மீட்ட அதிகாரிகள், திருப்பதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Thiruthani PMK Supporter Sanjeev Reddy Murder by his own Relation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->