D-Link கொண்டு வந்த அதிகாரிகள்.. ஆன்ட்டனாவை பார்த்ததும் ஆட்பறித்த எதிர்க்கட்சிகள்.. திருவள்ளூரில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் மட்டுமல்லாது பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களின் தேர்தலும் ஒரே நாளில் வெளியிடப்பவுள்ளது. 

தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் வாக்கு மெஷினை ஹேக்கிங் செய்து வாக்குகளை மாற்றும் முயற்சி நடந்து வருவதாகவும் குற்றசாட்டுகளை தமிழகத்தில் முன்வைத்தனர். மேலும், இந்த தேர்தலில் ஆன்ட்டனா, கண்டைனர் லாரி போன்றவை மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது. 

இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேர்தல் அதிகாரிகள் Wi-fi D-Link குகளை கொண்டு வந்துள்ளனர். 

இதனைகவனித்த எதிர்க்கட்சியினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த நிலையில், D-Link குகளை மொத்தமாக கையில் எடுத்து வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளன்று பத்திரிகையாளர்கள், அதிகாரிகளுக்கு தேவையான இணையதள சேவையை வழங்கும் பொருட்டு D-Link கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur SRM College Vote Booth D Link Political Parties Atrocity 28 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->