அலட்சியமாக இரயிலில் ஏற முயற்சித்து விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய இரயில்வே காவல் அதிகாரி, ஊழியர்.!! - Seithipunal
Seithipunal


இரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவல் அதிகாரி, சரக்கு இரயிலில் ஏற முயற்சிக்கையில் தவறி விழும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர் பணியை முடித்துவிட்டு சென்னைக்கு வருவதற்காக காத்திருந்துள்ளார். 

இதன்போது, ஆந்திராவில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற சரக்கு இரயிலின் கார்டு இருக்கும் பெட்டியில் ஏற முயற்சித்துள்ளார். இதன் போது கால் இடரி எதிர்பாராத விதமாக அவர் இழுத்து செல்லப்பட்ட நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு ஊழியர் அவரை காப்பாற்ற முயற்சித்தார். 

இந்த சமயத்தில், காப்பாற்ற சென்ற ஊழியரும் எதிர்பாராத விதமாக கால் இடறி இருவரும் இரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் விழுந்தனர். இரயில் சென்றதும் இருவரையும் மீட்ட அதிகாரிகள், அங்குள்ள மருத்துவமணியல் அனுமதி செய்தனர். 

இந்த சம்பவத்தில் சுரேஷுக்கு தலையில் அடிபட்ட நிலையில், மற்றொரு ஊழியருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையங்களில் வெளியாகி உள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Gummidipoondi Railway Station Railway Police and Employee Luckily Escape 20 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->