திருவள்ளூர்: தெப்பக்குளத்தில் துணிதுவைக்க சென்ற 2 பெண்கள், 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி.!! - Seithipunal
Seithipunal


புதுகும்மிடிபூண்டி அருகே தெப்பக்குளத்தில் துணிதுவைக்க சென்ற 2 பெண்கள் மற்றும் 3 சிறுமிகள் என 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சோகம் அரங்கேறியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதுகும்மிடிபூண்டி கிராமத்தில் அங்காளம்மன் கோவிலுக்கு அருகே, வெளிப்புறமாக உள்ள தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் இன்று அப்பகுதியை சார்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் துணிதுவைக்க சென்றுள்ளனர். அங்குள்ள சீத்தாம்மாள் தெரு பகுதியை சார்ந்த 5 குடும்பத்தை சார்ந்த அஸ்மிதா (வயது 14), ஸ்ரீவிதா (வயது 14), ஜோதி (வயது 10) மற்றும் சுமதி (வயது 35), சுகந்தி (வயது 38) ஆகியோர் துணி துவைக்க வந்துள்ளனர். சுமதி மற்றும் சுகந்தி படிக்கட்டில் அமர்ந்து துணிகளை துவைத்துக்கொண்டு இருந்துள்ளனர். 

சிறுமிகளான அஸ்மிதா, ஸ்ரீவிதா, ஜோதி ஆகியோர் விளையாட்டு ஆர்வத்தில் தெப்பக்குள நீரில் இறங்கி விளையாட தொடங்கியுள்ளனர். இதன்போது, சிறுமிகள் எதிர்பாராத விதமாக தெப்பக்குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் நீரில் தத்தளித்து உயிருக்காக அலறவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுமதி மற்றும் சுகந்தி ஆகியோர் சிறுமிகளை காப்பாற்ற பதறியடித்தபடி நீருக்குள் சென்றுள்ளனர். இவர்கள் 5 பெரும் நீருக்குள் ஆழமான பகுதியில் மாட்டிக்கொள்ளவே, யாருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். 

5 பேரும் நீருக்குள் சிக்கி உயிருக்கு போராடுவதை அப்பகுதியை சார்ந்த ஒருவர் எதற்ச்சையாக வருகை தருகையில் கண்டு அதிர்ச்சியடையவே, ஊராருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பெண்களை காப்பாற்ற முடியாத நிலையில், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்களின் உடலை தேடினர்.

சுமார் 30 நிமிட தேடலுக்கு பின்னர் 5 பேரின் உடலும் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் காவல் துறையினர் ஐவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விஷயம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நீச்சல் தெரியாமல் பெண்களோ ஆண்களோ நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Gummidipoondi Pond 5 Woman Died when Cleaning Clothes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->