சுடுகாட்டு வழியில் மதில்சுவர்.. இடித்து தள்ளிய பொதுமக்கள்.. திருவள்ளூரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


சுடுகாடு செல்லும் வழியில் தனிநபர் ஒருவர் எழுப்பிய மதிலை, பொதுமக்கள் கடப்பாரை கொண்டு இடித்து தள்ளிய சம்பவம் நடந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான இடம் ஒன்று இருக்கும் நிலையில், அப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அவ்வழியாக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அந்த தெருவின் முடிவில், உலகநாதன் சுற்றுச் சுவரை எழுப்பி இருக்கிறார். இதனால் இறந்தவர்களின் சடலங்களை எடுத்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

அவ்வழியை பொது பயன்பாட்டிற்கு தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டும் பலனில்லாத நிலையில், அப்பகுதியில் ஒரு முதியவர் இறந்துள்ளார். அவரது உடலைக் கொண்டு செல்வதற்கு உலகநாதனிடம் பாதையை திறந்துவிட பொதுமக்கள் கோரிக்கை வைத்த இருக்கின்றனர். 

அதில் உடன்பாடு ஏற்படாததால், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மதில் சுவரை இடித்து தள்ளி உடலை கொண்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்களுக்கும் - உலகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பிடமும் சமாதானம் பேசி தற்காலிக தீர்வு ஒன்றையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். 

இதனால் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிரிழந்தவரின் உடல் சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விசயத்தை உற்றுநோக்கி கவனித்தால் மத ரீதியான பிரச்சனை சர்ச்சைக்குரிய இடத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் கள நிலவரம் தெரிவிக்கிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur crematorium Way Brick Wall Demolished by Local Civilians 18 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->