#தமிழகம் || ஓடி போன இளம்பெண்., மீட்க சென்ற ஏட்டய்யா முத்துப்பாண்டி செய்த வேலை., அதிர்ச்சியில் காவல்துறையினர்.! - Seithipunal
Seithipunal


காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க சென்ற காவலர், அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் தென்காசி சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் தங்கி, பனியன் நிறுவனத்தில் பணி செய்து வந்துள்ளார். அந்த தொழிலாளியின் மனைவியும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக சென்ற அந்தப் பெண் திரும்பி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அந்த பெண்ணின் கணவர் குன்னத்தூரில் உள்ள காவல் நிலையத்தில், 'தனது மனைவி காணவில்லை' என்று புகார் அளித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்தப் பெண் பணிபுரிந்த அதே நிறுவனத்தில் ஒரு இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, அவருடன் சென்றதாக தெரியவந்தது.

இதனையடுத்து, தலைமை காவலர் (ஏட்டய்யா) முத்துப்பாண்டி அந்தப் பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த பெண் இருக்கும் இடம் காவலர் தலைமை காவலர் முத்துப்பாண்டிக்கு தெரியவந்தது.

இதனையடுத்து ஏட்டய்யா முத்துப்பாண்டி, அந்த பெண்ணை மீட்டு கணவனிடம் ஒப்படைக்க அழைத்து வந்துள்ளார். ஆனால், திடீரென மனம் மாறிய ஏட்டையா முத்துப்பாண்டி, அந்தப் பெண்ணை கணவரிடம் ஒப்படைக்காமல், திருப்பூருக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து, அந்த பெண் காவல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கவே, அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விசாரணை செய்து, போலீஸ் ஏட்டு முத்துப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUPUR LADY POLICE HC


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->