பிரசவத்திற்கு சென்ற பெண்ணிற்கு, அதை., இதை செய்து வைத்த மருத்துவர்கள்.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர், மாவட்டம் மங்கலம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(39) என்பவர் கூலி வேலை செய்கிறார். அவருக்கு லட்சுமி(25) என்ற மனைவியும், துளசிமணி(6), என்ற குழந்தையும் இருக்கிறது. 

delivery women,seithipunal

கடந்த ஜுன் மாதம் 13-ம் தேதி இரண்டாவது பிரசவத்துக்காக  திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார். பின்னர், 14-ம் தேதி அறுவை சிகிச்சை லட்சுமிக்கு செய்யப்பட்டது. அதில், பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை தவறாக மேற்கொண்டதன் காரணமாக சிறுநீர் குழாயை அறுத்து விட்டதால், யூரினல் ட்யூப் இணைக்கப்பட்ட நிலையில் 21 நாட்கள் ஆகிவிட்டது.

21 நாட்கள் ஆகியும் யூரினல் ட்யூபை அகற்றபடாமல் இருப்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்க, அதனை அகற்றினால் உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் தவறான சிகிச்சை மேற்கொண்டு அதனை மறைப்பதாகவும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

operation seitipunal, delivery

பின்னர் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர், அவர்களிடம் சமாதானம் பேசிய நிலையில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்(பொறுப்பு) சோமசுந்தரம் "சிலருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது சிறுநீரக பை சருங்கி விரிந்து கொண்டிருக்கும். மேலும் உள் ரணங்களால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் யூரின் ட்யூப் வைக்கப்படுகிறது. ரணம் ஆறியதும் யூரினல் ட்யூப் அகற்றப்படும். இது வழக்கமான நடப்பது தான்" என தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruppur general hospital issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->