திருப்போரூர் தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன?.. பாமக நிறுவனர் இராமதாஸ்..! - Seithipunal
Seithipunal


திமுக தலைவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியது நான் தான் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தை ஆதரித்து, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் திருப்போரூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது மருத்துவர் இராமதாஸ் பேசுகையில், " திமுக தலைவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியது நான் தான். கலைஞர் ஒருகாலத்தில் அதிகஅளவு கஷ்டப்பட்டு வந்ததை பார்த்து, நீங்கள் மு.க ஸ்டாலினிக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கூறி துணை முதல்வர் பதவியை வழங்கச்சொன்னேன். 

மு.க ஸ்டாலினும் அதனை என்னிடம் தெரிவித்து ஒருகாலத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அதிமுக தலைமையிலான அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாமகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சி ஆயுதம். அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுதசுரபி. பாமகவின் பல்வேறு திட்டங்களும் இன்று அதிமுகவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கல்வி, மருத்துவம் போன்றவை இலவசமாக வழங்கப்படும். திருப்போரூர் தொகுதியில் தண்ணீர் பிரச்சனை அதிகளவு உள்ளது. அதனை தீர்க்க கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும். திருப்போரூர் நகரில் பாலிடெக்னீக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பக்கிங்காம் கால்வாய் சுற்றுலா படகு சேவை தொடங்கப்படும். அந்த சுற்றுலா சேவை செயல்படுத்தப்பட்டு, அதில் நான் பயணம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. 

சென்னையில் இருந்து புதுச்சேரி - கடலூர் வரை இரயில் பாதை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஏ.கே மூர்த்தி மற்றும் வேலுவின் திட்டங்கள் அது. அதனை கட்டாயம் நிறைவேற்றுவோம். சிறுசேரி சிப்காடில் திருப்போரூர் தொகுதி மக்களுக்கு அதிகளவு வேலை வாங்கி தரப்படும். 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வழிவகை செய்யப்படும். இது தொடர்பாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சிற்பிகள் நகரம் அமைக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துகளினால் உயிரிழப்பு ஏற்படுகிறது. அதனை குறைக்க நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைக்க வழிவகை செய்யப்படும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruporur PMK Dr Ramadoss Election Campaign 24 March 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->