வினோத நோயால் அவதியுறும் திருவண்ணாமலை தெருநாய்கள்.. அச்சத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் இல்லத்திலேயே முடங்கியுள்ள நிலையில், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை பகுதியில் வசித்து வரும் நாய்களுக்கு வினோத நோய் பரவ துவங்கியுள்ளது. 

இதனால் நாய்களின் உடலில் அரிப்பு போன்ற பிரச்சனை ஏற்பட்டு நாய்கள் அனைத்தும் சொரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் உடலின் தோல் மற்றும் உரோமம் உரிந்து காணப்பட்டு வருகிறது. இது சொறி தொடர்பான நோயாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

மேலும், ஊரடங்கின் காரணமாக ஏற்கனவே உணவுகள் இல்லாது பட்டினியாக வாழ்ந்து வரும் நாய்களுக்கு, இது போன்ற நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அச்சத்தை அப்பகுதி மக்களிடையே பதிவு செய்துள்ளது. கால்நடை துறையினர் நோய்க்கான காரணத்தை கண்டறிந்து, நோய்பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirunvannamalai street dogs affected unknown diseases


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->