காஞ்சிபுரம்., செங்கல்பட்டு., வேலூர் மாவட்டங்களின் தற்போதைய தாலுகாக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை அந்தந்த மாவட்டங்களில் வளர்ச்சிக்காக மாவட்டங்களைப் பிரித்து தற்போது தமிழக அரசு அறிவித்து வருகிறது. 

அந்த வகையில்., வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது., இதனைப்போன்று மேலும் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அரசாணை தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தது. 

இதனைப்போன்று இன்னும் சில மாவட்டங்கள் பிரிப்பதற்கான பணியில் இருக்கும் நிலையில்., திருநெல்வேலி மாவட்டத்தினை இரண்டாக பிரித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.  

thirunelveli railway station, திருநெல்வேலி,

தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில்., திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை., பாளையங்கோட்டை., மானூர்., நாங்குநேரி.. சேரன்மாதேவி., ராதாபுரம்., அம்பாசமுத்திரம் மற்றும் திசையன்விளை தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் தென்காசி., சங்கரன்கோவில்., செங்கோட்டை., கடையநல்லூர்., சிவகிரி., வி.கே புதூர்., திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தில் செயல்பட உள்ளது.

vellore railway station, வேலூர்,

வேலூர் மாவட்டமும் தற்போது பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரித்து காஞ்சிபுரம்., செங்கல்பட்டு என இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கி காஞ்சிபுரம் மாவட்டம் செயல்படும் என்றும்., காஞ்சிபுரம்., உத்திரமேரூர்., ஸ்ரீபெரும்புதூர்., வாலாஜாபாத்., குன்றத்தூர் ஆகிய தாலுகாக்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு., மதுராந்தகம்., தாம்பரம் ஆகிய கோட்டங்கள் செயல்படும் என்றும்., செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களாக செங்கல்பட்டு., மதுராந்தகம்., செய்யூர்., திருப்போரூர்., தாம்பரம்., திருக்கழுக்குன்றம்., பல்லாவரம் மற்றும் வண்டலூர் உள்ளிட்ட 8 தாலுகாக்களை உள்ளடக்கி செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

செங்கல்பட்டு சந்திப்பு, செங்கல்பட்டு ரயில் நிலையம், chengalpat railway station,

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரித்து வேலூர்., திருப்பத்தூர்., ராணிப்பேட்டை என மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. வேலூர் மாவட்டத்திற்கு வேலூர்., குடியாத்தம் என புதிய இரண்டு வருவாய் கோட்டங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டங்களும்., இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் புதிய வருவாய் கோட்டங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirunelveli kanchipuram vellore chengalpat district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->