"டியூஷனுக்கு போகலையா?" திட்டிய அண்ணன்.! தோழியுடன் சேர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கை.!  - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வள்ளியூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் கந்தன். இவருக்கு பவித்ரா என்ற 10 ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கின்றார். அதே பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவரது மகள் சிந்துவுடன் சேர்ந்து டியூஷனுக்கும் செல்வாராம். 

நேற்று பவித்ரா டியூஷனுக்கு செல்லாமல் லீவ் போட்டு இருக்கின்றார். பவித்ரா வீட்டில் இருப்பதைக் கண்ட அவருடைய அண்ணன், "ஏன் டியூஷனுக்கு போகல"என்று பவித்ராவை திட்டி இருக்கின்றார். இதன் காரணமாக கோபமடைந்த பவித்ரா அவளின் அண்ணன் திட்டியது குறித்து தோழி சிந்துவிடம் கூறியுள்ளார். 

உடனடியாக, அவர்கள் இரண்டு பேரும் கடைக்கு போவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கின்றனர். இரண்டு பேரும் வெளியே சென்று வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராத காரணத்தால் அச்சமடைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அப்பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் இவர்கள் இரண்டு பெரும் சென்றது குறித்து ஏதேனும் பதிவாகியுள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirunelveli girls missing form home


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->