பிரதமர் மோடியை வரவேற்கும் திமுக.! விசிக-திருமாவின் நிலைப்பாடு என்ன? பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தனியார் செய்தி ஊடகமொன்றிற்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது,

"தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பது, ஒரு ஆளுங்கட்சி என்கின்ற அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துள்ள நிலைப்பாடு சரியானது தான். 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், திமுக எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பதும் அல்லது சில நேரங்களில் விலகி இருப்பதும், ஒரு தனிப்பட்ட சுதந்திரம், தனிப்பட்ட உரிமை.

இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் கலந்து ஆலோசனை செய்யவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் அழைப்பை ஏற்று இங்கு வருகின்ற நிலை இருக்கிறது பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்பது திராவிட முன்னேற்றக் கழகம் சரியான முடிவை எடுத்துள்ளது.

முந்தய அதிமுக ஆட்சியில் அவர்கள் பிரதமரை வரவேற்றதும் சரிதான். அதனை குற்றம் சொல்லவில்லை. அப்போது நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து, நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்தோம்.

அன்று அவர்கள் இதே போன்ற ஒரு நிலைப்பாடு (பிரதமரை வரவேற்பது) எடுத்து இருந்தால், அவர்களுடைய பார்வையில் அது சரிதான். நாங்கள் எதிர்க்கட்சியாக பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது.

அதுபோல இன்று திமுக இப்படி ஒரு முடிவை எடுப்பதால், எதிர்கட்சிகள் அமைதியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை" திருமாவளவன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUMAVALAVAN SAY ABOUT GO BACK MODI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->