பெரம்பலூர் : திருமாந்துறை டோல்கேட்டில் பரபரப்பு - போலீசார் குவிப்பு! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் : திருமாந்துறை சுங்கச்சாவடிகள் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால், சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சென்று வருகின்றன.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு 'பாஸ்ட் ட்ராக்' மூலம் சுங்கவரி வசூல் செய்யப்பட்ட வருகிறது.

இந்த நிலையில், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்த 25 ஊழியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இதனை கண்டித்து இன்று திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரியக்கூடிய 120 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஊழியர்களின் கோரிக்கையாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த திருமாந்துறை சுங்கச்சாவடியை கடந்துச் செல்லும் வாகன ஓட்டிகள், சுங்க கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சென்று வருகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் சுங்கச்சாவடி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் இந்த போராட்டம் தருணமாக இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumanthurai tollgate protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->