திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாளை கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என, திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருபதாவது, 

"கார்த்திகை தீபத் திருநாளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் வைத்து இரவு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறும். 

ஆனால், கொரோனா பொது முடக்கத்தால் கடற்கரையில் வைத்து (நவ.29) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு இவ்வாண்டு அனுமதிக் கிடையாது. 

ஆனால் திருக்கோயிலில் காலை முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் இணைய முன்பதிவு மற்றும் நேரடி தரிசனம் செய்யலாம்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruchendur murugan temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->