தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 46 % மாணவர்களால் மட்டுமே தமிழ் படிக்க முடிந்தது - ஆய்வில் தகவல்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் நாடு முழுவதும் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அடிப்படை கற்றல் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் 336 பள்ளிகளை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் 2,937 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட மாணவர்களில் பாதி பேருக்கு தமிழ் சரியாக படிக்க தெரியாது என்று தகவல் தெரியவந்துள்ளது. 

மேலும் 20 சதவீதம் பேர் மட்டுமே, தமிழ் உரையை புரிந்து கொள்வதில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று தமிழ்நாட்டில் 23 சதவீதம் மாணவர்கள் மட்டுமே எண்களை கண்டறிதல், பெருக்கல், வகுத்தல், எண்கள் மற்றும் வடிவங்களை கொண்ட அடிப்படைகளை கண்டறிதல், காலண்டர்களில் தேதிகள் மற்றும் மாதங்களை கண்டறிதல் போன்றவற்றில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதில் 52 சதவீத மாணவர்களால் நாட்காட்டியில் தேதி மற்றும் மாதத்தை கூட சரியாக அடையாளம் காண முடியவில்லை. இதற்கு நேர்மாறாக தென்மாநிலங்களை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்த ஆய்வு குறித்து என்.சி.இ.ஆர்.டி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "46 சதவீத மாணவர்களால் மட்டுமே 80 முதல் 100 எழுத்துக்களை தமிழில் சரியாகவும், சரளமாகவும் படிக்க முடிந்தது. 47 சதவீத மாணவர்களால் மட்டுமே 80 சதவீத ஆங்கில வார்த்தைகளை சரளமாக படிக்க முடிந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஆய்வு நிபுணர்கள் தெரிவித்ததாவது, "கொரோனா தொற்று நோய் பரவலால் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளில் கண்காணிப்பு இல்லாதது உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்" என்று தெரிவித்தனர்.

மேலும், பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "மாணவர்களுக்கு கடிதங்கள் வாசிப்பது, வார்த்தைகளை படிப்பது ஆரம்ப நிலையில் ஒரு பிரச்சினையாக உள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் மாணவர்களின் இந்த பிரச்சினையை தீர்க்கும் என நம்புகிறோம்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

third class students forty six percentage students read tamil letters in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->