ஊத்தங்கரை அருகே பரபரப்பு...! தண்டவாளத்தில் படுத்து முதியவர் எடுத்த விபரீத முடிவு...! காரணம் என்ன...? - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகிலுள்ள தாசம்பட்டி ரெயில் நிலைய யார்டு பகுதியில் அமைந்துள்ள தண்டவாளத்தில், நேற்று அதிகாலை சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடல் முகம் சிதைந்த நிலையில் கிடந்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த முதியவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதையும், உயிரிழப்புக்கான பின்னணி என்ன என்பதையும் கண்டறிய காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், முதியவர் தற்கொலை எண்ணத்துடன் தண்டவாளத்தில் குறுக்கே படுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சமயம் அந்த வழியாகச் சென்ற சென்னை–ஆலப்புழா விரைவு ரெயில் (எண்: 22639) அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்த முதியவர் சட்டை மற்றும் லுங்கி அணிந்திருந்ததாகவும், அவர் எந்த காரணத்தால் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்தும் காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There commotion near Uthankarai old man lying tracks made strange decision What reason


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->