வரதட்சணைக்காக மனைவி அடித்துக்கொலை.. 1 வருடம் கழித்து குடும்பத்துடன் கைதான முன்னாள் இராணுவ வீரர்.! - Seithipunal
Seithipunal


மனைவியை கொலை செய்து சடலத்தை சாக்குப்பையில் கட்டி ஆற்றில் வீசிய கணவன், ஒன்றரை வருடமாக நாடகமாடிய சம்பவம் நடந்துள்ளது. 

தேனியை சேர்ந்த இராணுவ வீரர் ஈஸ்வரன். இவரது மனைவி கிரிஜா பாண்டியன். இவர்கள் இருவருக்கும் கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், திருமணம் முடிந்த நாளிலிருந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த 2019 ஆம் வருடம் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, இதனால் ஈஸ்வரனின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்த நடவடிக்கை காரணமாக இராணுவத்திலிருந்து ஈஸ்வரன் நீக்கப்பட்ட நிலையில், சமரசம் பேசி கிரிஜா பாண்டியன் அவரது பெற்றோருடன் பேசக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தம்பதிகள் இருவரும் தனியாக சேர்ந்து வாழத் தொடங்கி இருக்கின்றனர்.

தனது மகள் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று எண்ணிய கிரிஜா பாண்டியனின் பெற்றோர், கடந்த ஒன்றரை வருடமாக மகளை பார்க்காமலும், பேசாமலும் தங்களின் வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், மனைவி மற்றும் மகனுடன் ஏற்பட்ட சண்டையால் தனியே வசித்து வந்த ஈஸ்வரனின் தந்தை சிவகுமார், உடல்நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

மரணப்படுக்கையில் இருந்த ஈஸ்வரனை பார்க்க கிரிஜா பாண்டியனின் தந்தை செல்வம் சென்ற நிலையில், ஈஸ்வரன் தனது மனைவி கிரிஜா பாண்டியனை அடித்து சித்ரவதை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, மகளை பார்க்க அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு தந்தை செல்வம் குடும்பத்துடன் சென்று நிலையில், அங்கு குடும்பம் இல்லாமல் வேறு பல இடங்களில் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. 

இதனையடுத்து, தேனி நகர காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி செல்வம் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது. விசாரணையில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் தலைமறைவாக இருந்த ஈஸ்வரனை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். 

விசாரணையில், வரதட்சணை கொடுமையால் இராணுவப் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் அதை சொல்லி சண்டையிட்டு வந்த ஈஸ்வரன், கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் 27 ஆம் தேதி ஏற்பட்ட சண்டையில் மனைவி கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

கொலையை மறைக்க இராணுவ வீரரான ஈஸ்வரன், தனது தம்பியான பழனி பட்டாலியன் காவல் அதிகாரி சின்ன ஈஸ்வரன் மற்றும் தாய் செல்வி ஆகியோரின் உதவியுடன், கிரிஜா பாண்டியன் உடலை சாக்குப்பையில் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று அங்குள்ள அரண்மனைப்புதூர் முல்லை ஆற்றில் வீசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும், சந்தேகம் ஏற்படாமல் இருக்க அடிக்கடி வீட்டை மாற்றி குடும்பத்தினருடன் தங்கியிருந்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடத்தில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் வீடு மாறியுள்ளனர். வரதட்சனை கொடுமையால் இளம்பெண்ணை கொலை செய்த ஈஸ்வரன், அதனை மறைக்க உதவி செய்த சின்ன ஈஸ்வரன், செல்வி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Wife Murder by Husband Eswaran After 1 Year Police Arrest Culprits 4 July 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->