தங்கையை வீட்டிற்கு அழைத்து செல்ல சைக்கிளில் வந்த அண்ணன்... உதவி செய்த தேனி காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்நகர் பகுதியை சார்ந்தவர் முத்து. இவரது மனைவியின் பெயர் தமிழ்செல்வி. இவர்களுக்கு ஜீவராஜ் என்ற மகனும், ப்ரவீனா என்கிற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், ஜீவராஜ் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். ப்ரவீனா தேனியில் இருக்கும் கண் மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயின்று வருகிறார். 

தற்போது அமலாகியுள்ள கரோனா பாதிப்பின் காரணமாக ப்ரவீனா தேனியில் சிக்கிய நிலையில், தனது குடும்பத்தாருடன் அலைபேசியில் பேசி வந்துள்ளார். ஜீவராஜ்க்கு சகோதரியின் மீது பயம் ஏற்பட்டுள்ளது. தேனியில் அதிகளவு கரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அவதியுற்றுள்ள நிலையில், தங்கையின் நிலையை எண்ணி சகோதரர் வருந்தியுள்ளார். 

இதனையடுத்து தங்கையை வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்த நிலையில், இவர்களின் குடும்பத்தினர் ஏழ்மையில் அவதியுற்று வந்ததால் தனது மிதிவண்டியில் தேனி செல்ல முடிவெடுத்த ஜீவராஜ், சைக்கிளில் தேனிக்கு புறப்பட்ட நிலையில், தேனியில் உள்ள தனது தங்கை வசித்து வந்த கல்லூரிக்கு சென்று தங்கை கண்டுள்ளார். அண்ணனை கண்டதும் ப்ரவீனா தேம்பி தேம்பி அழத்துவங்கியுள்ளார். 

இதன்பின்னர் இருவரும் சைக்கிளில் புறப்பட தயாரான நிலையில், இடையில் காவல் துறையினர் பிடித்து விடுவார்கள் என்று எண்ணிய இருவரும், தேனி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து விஷயத்தை கூறியுள்ளனர். இதனையடுத்து தேனியை சார்ந்த சமூக ஆர்வலர்களின் உதவியுடன் மதுரைக்கு செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சைக்கிள் தேனி காவல் நிலையத்தில் இருக்கட்டும் என்றும், ஊரடங்கு முடிந்தவுடன் சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni police help to brothers and sister to go native


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->