தேனி: இறந்ததாக அறிவிக்கப்பட்டு கல்லறைக்கு சென்ற குழந்தை உயிருடன் பிழைத்த இன்ப அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தேனியில் மயானத்தில் புதைக்க கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிருடன் வந்ததால் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தாட்கள் நகர் பகுதியை சார்ந்தவர் இடல் ராஜா. இவரது மனைவி ஆரோக்கிய மேரி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், ஆரோக்கிய மேரி கர்ப்பிணியாக இருந்த நிலையில், நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, வீட்டிலேயே பனிக்குடம் உடைந்துள்ளது. இதனையடுத்து, குடும்பத்தினர் ஆரோக்கிய மேரியை தேனி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பிரசவத்திற்காக அனுமதி செய்துள்ளனர். 

நள்ளிரவில் அனுமதி செய்யப்பட்ட ஆரோக்கிய மேரிக்கு அதிகாலை 03.30 மணியளவில் பிரசவம் ஏற்பட்டு குழந்தை பிறந்த நிலையில், குழந்தை 700 கிராம் எடையுடன் பிறந்துள்ளது. இதனால் சிறிது நேரத்திலேயே குழந்தை சுவாச பிரச்சனை ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. 

மருத்துவர்களால் குழந்தை இறந்தது உறுதி செய்யப்பட்டு அதற்கான தகவலும் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டு, காலை 08.30 மணியளவில் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், கிருஸ்துவ முறைப்படி குழந்தையின் உடலை அடக்கம் செய்ய கல்லறைக்கு சென்றுள்ளனர். 

இதன்போது, குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாக குழந்தையின் உடலில் உயிர் இருப்பது போன்ற அறிகுறி தென்பட்டுள்ளது. இன்ப அதிர்ச்சியில் செய்வதறியாது ஒருகணம் திகைத்துப்போன குடும்பத்தினர், குழந்தையை மீண்டும் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதி செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தேனி மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் கேட்கையில், " குழந்தை குறைமாதத்தில் பிறந்த குழந்தை என்பதால், சுவாச பிரச்சனை ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தவறுகள் நடந்து இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

மருத்துவ விஷயங்களில் மக்களை சில இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளது. ஆகையால், அதனைப்போன்றதொரு அதிஷ்டத்தில் குழந்தை உயிர்பிழைத்திருக்க வாய்ப்புகளும் உள்ளது. விசாரணைக்கு பின்னர் உண்மை தெரியவரும் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Periyakulam Baby Luckily Born After Announce he Dead 4 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->