கள்ளக்காதலனுடன் சேர்ந்து அன்பான கணவனிடம் கடத்தல் நாடகம்.. நொந்துபோன கணவனின் கண்ணீர்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி கோட்டை குமார். இவன் ஜே.சி.பி ஆபரேட்டர் பணியாற்றுவதாக கூறி, கோயம்புத்தூர் பாப்பம்பட்டி பகுதியில் பிரபு என்பவரின் வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளான். இந்நிலையில், பிரபுவின் மனைவி பத்மஸ்ரீக்கும், குமாருக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியூர் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த 17 ஆம் தேதி பிரபு வெளியே சென்றிருந்த நிலையில், அவரது தாயார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்து பிரபுவின் வீட்டிற்கு வந்த குமார், பிரபுவின் தாயாரை மிரட்டி பத்மஸ்ரீயை கடத்திச் சென்றுள்ளார். 

இதன் பிறகு பிரபுவிற்கு தொடர்பு கொண்டு ரூபாய் ஒரு லட்சம் கொடுத்தால் மனைவியை விடுவிக்கிறேன் என்றும், பணம் கொடுக்காத பட்சத்தில் பெங்களூர், மும்பை போன்ற இடங்களில்  பணத்திற்கு விற்பனை செய்து, பத்ம ஸ்ரீயை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். 

இதனால் மனதளவில் நொறுங்கிப்போன பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவு பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விசாரணையில், பிரபு மனைவியின் மீது அதிக பாசம் கொண்டவராக இருந்து வந்த நிலையில், வசதியானவராகவும் இருந்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த கோட்டை குமார், பத்மஸ்ரீ யுடன் அவ்வப்போது தலைமறைவாகி ஊர் சுற்றுவதும், பின்பு பிரபுவை மிரட்டி பணம் பெற்றுக்கொண்டு பத்ம ஸ்ரீயை ஒப்படைப்பதுமாக இருந்து வந்துள்ளார். 

தற்போது வரை சுமார் மூன்று முறை பத்மஸ்ரீயை கடத்திச் சென்றுள்ளதாக கூறி பிரபுவிடம் பணம் வாங்கியுள்ளார். இந்த கடத்தல் நாடகத்திற்கு பத்மஸ்ரீயும் உடந்தையாக இருந்த நிலையில், மனைவி மீதுள்ள அன்பு மற்றும் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்ற பயத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் மூன்று முறை பணம் கொடுத்து இருந்துள்ளார். 

இந்த நிலையில், நான்காவது முறையும் பத்மஸ்ரீ கோட்டை குமாருடன் தலைமறைவாகவே, பொறுமையை இழந்த பிரபு சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் தலைமறைவாகியுள்ள கள்ளக்காதல் ஜோடியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், கோட்டை குமார் மீது கஞ்சா விற்பனை, அடிதடி, கொள்ளை போன்று பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Culprit Affair with Coimbatore girl Padma Sri Escape with Kidnap Plan Police Investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->