கலெக்டர் அலுவலகத்தில் மர்ம பார்சல்.! பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் மர்ம பார்சல் தொங்கியது பொது மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் மர்ம பார்சல் ஒன்று தொங்கிக்கொண்டிருந்த்துள்ளது. 

அந்த பார்சலின் மீது இன்று கடைசி நாள் என்று எழுதப்பட்டு இருந்தது. அதன் அருகாமையில் நவம்பர் 11 என்ற தேதி குறிப்பிடப்பட்டு நட்சத்திரங்கள் வரையப்பட்டு இருந்தன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த மக்கள் இந்த பார்சலை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை மக்கள் மிகுந்த அச்சத்துடன் எடுத்துச் சென்றனர். அந்த பார்சலில் எழுதப்பட்டு இருந்த வாசகம் மற்றும் மது கட்டி வைக்கப்பட்டு இருந்த விதம் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த மர்ம பார்சலை எடுத்து திறந்து பார்த்த பொழுது அதற்குள் வெறும் அட்டை மட்டும் இருந்துள்ளது. அதன்பின்னர் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுற்றித் திரிந்த, காரணத்தால் அவர் மரத்தில் அந்த பார்சலை கட்டி வைத்தது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni collector office parcel issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->