மதுப் பிரியர்களுக்கு அதிர்ச்சி.. இவர்களுக்கு மட்டும் தான் மது விற்பனை.. வெளியான அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் மதுபானங்கள் வாங்க வருபவர்களுக்கு தடுப்பூசி சான்று கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். 

தேனி மாவட்டத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களில் சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மது பிரியர்கள் பலர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், கொரோனாவின் மூன்றாவது அலையில் அதிக நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இதனால், அனைத்து மதுக்கடைகளிலும் மதுபானங்கள் வாங்க வருபவர்கள்  கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் அல்லது குறுஞ்செய்தியை சரிபார்த்த பின்னரே விற்பனையாளர்கள் மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் பணியாளர்கள் மீது இந்திய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni collector new order for tasmac sale


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->