போடியில் கட்டுப்பாடுகள் மாற்றம்.. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் ஊரடங்கு கடுமையாக அறிவிக்கப்பட்டும், பின்னர் தளர்த்தப்பட்டும் வருகிறது. சென்னையில் கடந்த சில மாதமாக உச்சக்கட்டத்தில் இருந்த கொரோனா வைரஸின் தாக்கமானது மாவட்டங்களுக்குள் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். 

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கமானது பெருமளவு அதிகரிக்க துவங்கியுள்ளது. துவக்கத்தில் மதுரை, தேனி, சென்னை சுற்றுவட்டார மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட சூழலில், இப்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மீண்டும் கொரோனாவின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், போடி நகராட்சியில் ஜூலை 10 முதல் ஜூலை 23 வரை கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. அதன்படி நகரின் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே வந்து வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து நோய் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன் " என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Bodinayakanur Lockdown Announced by Minister SP Velumani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->