கனமழை எதிரொலி.. போடிமெட்டு சாலையில் நிலச்சரிவு..! - Seithipunal
Seithipunal


வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேனி மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. 

கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை மற்றும் திடீர் கனமழை காரணமாக போடி மெட்டு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான பாறைகள் சாலையில் உருண்டு விழுந்துள்ளது. இதனால் போடி மெட்டு வழியாக கேரளா செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

இதனையடுத்து, போடி மெட்டு வழியாக கேரளா செல்ல தடை விதித்து தேனி மாவட்ட காவல்துறை உத்தரவிட்ட நிலையில், கம்பம் மெட்டு மற்றும் குமுளி வழியாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் செல்லலாம் என அறிவித்துள்ளது.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Bodimettu Road Closed due to Land Slide 10 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->