தேனி அருகே கொடூர விபத்து.! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.! - Seithipunal
Seithipunal


தேனிமாவட்டம் : பங்களாமேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ஒன்று சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பங்களாமேடு பகுதியை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ ஒன்று சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது நேர் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, அந்த விபத்துக்குள்ளான ஆட்டோ மீது ஏறியது.

இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

அரண்மனை புதூர் பகுதியில் இருந்து தேனி நோக்கி, ஆறு பேரை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த ஷேர் ஆட்டோ, தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையின் பங்களாமேடு பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி அடுத்த ஒரு நொடியில், எதிரே வந்த லாரி மோதி மேலும் ஒரு விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni auto lorry accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->