200 ஏக்கர் விவசாய நிலத்தை தின்னும் குவாரி தூசிகள்.. தேனி விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


கல் குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசியினால் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மலட்டுத் தன்மை அடைந்து தரிசு நிலமாக மாறி வருவதாக விவசாயிகள் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். 

தேனி என்று கூறினாலே பச்சை பசேலென வயல்வெளிகளும், காய்கறியுடன் பூத்துக்குலுங்கும் செடிகள், கொடிகள் என்று காணப்படும். தென்னந்தோப்புகள், அருவிகள் என்று அப்பகுதி முழுவதும் விவசாயத்தால் செழித்து பசுமையாக காணப்படும். 

இந்நிலையில், தேனி அருகே உள்ள பூத்திபுரம் வாடிப்பட்டி கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் தரிசு நிலமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 60 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமாக 200 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ள நிலையில், கத்திரி, வெண்டை, பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து விவசாயம் செய்து வருகின்றனர். 

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னதாக 3 தனியார் கல்குவாரிகள் உருவான நிலையில், இங்கு தற்போது எம்.சாண்ட் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக உருவாகும் தூசி அருகில் உள்ள 200 ஏக்கர் விவசாய நிலத்தில் அடர்ந்து காணப்பட்டு, அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தூசியால் பாதிக்கப்பட்டு, பயிர்களுக்கு நீர் பூமிக்கடியில் செல்லாமல் தூசிகள் மூலமாக தடுக்கப்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. 

மேலும், கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக வரை 200 அடியில் நிலத்தடி நீர் இருந்து வந்த நிலையில், தற்போது 600 அடி ஆள்துளை கிணறு அழைத்தாலும் நீர் இல்லாமல் போயுள்ளது. சுவையாக இருந்த இளநீரும், தனது சுவையை மாற்றி உவர்ப்புத்தன்மையுடன் மாறி விட்டதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக தேனி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Agriculture Land Spoil due to M Sand Manufacture Quarry Mines


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->