#தமிழகம் : சிறுமியை கடத்தி திருமணம் : உடலில் தீ.,வைத்து ஓடிவந்த நாடக காதலன்! - Seithipunal
Seithipunal


கைது நடவடிக்கையால் தற்கொலை முயற்சியா ? பெண்ணின் உறவினர்களால் கொலை முயற்சியா? போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மைனர் பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் பற்றி எரியும் நெருப்புடன் ஓடி வந்த நிகழ்வு வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த இளைஞர் 17 வயது சிறுமியை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி வெளியூர் கூட்டிச்சென்று அச்சிறுமியை திருமணம் செய்தாக கூறப்படுகிறது. அச்சிறுமியின் பெற்றோர் தனது பெண் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் பேரில் அந்த இளைஞர் மீது போக்சோ மற்றும் கடத்தல் ஆகிய இரு வழக்குகள் பதியப்பட்டு அந்த இளைஞரை தேடி வந்துள்ளனர். அந்த இளைஞர் 14ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளாாத கூறப்படுகிறது.

உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வாணியம்பாடி காவல் நிலையத்தில் பெண்ணை 15ஆம் தேதி அந்த இளைஞரின் உறவினர்கள் ஒப்படைத்துள்ளார். பிறகு அப்பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். அந்த இளைஞர் மீது போக்சோ சட்டம் பதியப்பட்டுள்ளதால் பெற்றோரை அழைத்து இளைஞரை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளாத சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த இளைஞர் இன்று உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் தனது வீட்டை நோக்கி ஓடிவந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

அந்த இளைஞர் 60 சதவீதம் தீக்காயங்களுடன் இருப்பதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெண்ணின் உறவினர்கள் அந்த இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். போலீசார் தரப்பில் அந்த இளைஞரே தன் மீது தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The youth who married a minor girl ran away with a burning fire


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->