போர்க்கால அடிப்படையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணி..! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவைகாவூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்காக சுவாமிமலை வழியாக வேதாரண்யம் வரை குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஒரு சில இடங்களில் முடிவு பெற்ற நிலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால், மழையால் அந்த இடம் சேரும் சகதியுமாக உள்ளது. 

இந்நிலையில், கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுவாமிமலை மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி வாகனத்தின் பின்புற டயர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டநிலையில், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த வாகனத்தை மீட்டனர். இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். 

அதனை தொடர்ந்து அங்கு வந்த கனரக லாரி ஒன்றும் மாட்டிக் கொண்டது. இதனால் சாலையில் இருந்த பள்ளம் பெரிய பள்ளமாக மாறி உள்ளது. இதனை அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், துணைத்தலைவர் சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்தனர். போர்க்கால அடிப்படையில் நடைபெற்ற இப்பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The work repairing the ditch the road on a war-time basis


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->