ராணிப்பேட்டையில் பயங்கரம்.! மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை வெட்டிக்கொன்ற மனைவி.!
The wife who murder her husband in ranipet
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவரை கத்தியால் மனைவி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஒழுகூர் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி ஏழுமலை (48). இவருடைய மனைவி கலைச்செல்வி (38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ஏழுமலைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தையடுத்து நேற்று முன்தின இரவும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ஏழுமலை தகராறில் ஈடுபட்டு மனைவியை திட்டி, தாக்கியுள்ளார். இதனால் கலைச்செல்வி அருகில் இருந்த கத்தியை எடுத்து ஏழுமலையின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ஏழுமலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கலைச்செல்வியுடம் விசாரணை நடத்தியதில், கணவர் தாக்கியபோது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தற்காப்பிற்காக கத்தியால் வெட்டியதாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கலைச்செல்வியை கைது செய்து மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The wife who murder her husband in ranipet