தரைப்பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தொடர்ந்து பெய்யும்   மழையால்  தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.  பொதுமக்கள் அவதி..!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, அமிர்தி வனப்பகுதியில் அமைந்துள்ள வன உயிரியல் பூங்க அருகில்  ஜவ்வாதுமலையிலிருந்து நாகநதி  ஓடி வருகிறது. ஜவ்வாதுமலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கின்ற மலைவாழ் மக்கள் இந்த நாகநதியைக் கடந்துதான் செல்ல வேண்டும். 

எனவே, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில்  இந்த நதியின் குறுக்கே உயர் சிமெண்ட் பாலம் கட்ட ரூ.3.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  பணிகள் நடைபெற்று வரும் இந்த பாலத்தின் அருகே மக்கள் பயன்பாட்டிற்காக ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.  

கடந்த மூன்று, நான்கு நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று இரவு நாகநதியில் மழைவெள்ளம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதன்காரணமாக, தற்போது மலைவாழ் மக்கள்  ஆற்றைக்கடக்க முடியாமல் தவிர்த்து வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The public was shocked when the ground bridge was swept away by the river.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->