முட்டை விலை திடீர் உயர்வு; ஒரே நாளில் 5 பைசா உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி.. - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 04 ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கியுள்ளன. இதனால், பள்ளிகளின் சத்துணவுக்காக முட்டை அதிக அளவில் பள்ளிகளுக்கு செல்கிறது. 

அத்துடன், தமிழிகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

மேலும், வட மாநிலங்களில் மழை காலம் என்பதால் அதிக அளவுக்கு முட்டை விற்பனைக்கு செல்கிறது. இந்நிலையில், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தின் முடிவில் இன்று முதல் முட்டை விலை ரூ 5.85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு முட்டையின் விலை இன்று ஒரே நாளில் 5 பைசா உயர்ந்துள்ளது. அதேபோன்று மற்ற மண்டலங்களிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை போன்ற காரணங்களை மேற்கோள் காட்டி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டை விலையை இன்று ஒரே நாளில் ஐந்து பைசா உயர்த்தியுள்ளது.

அத்துடன் இனிவரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயரக்கூடும் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The public is shocked by a 5 paise rise in egg prices in a single day


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->