இந்துக் கோவில் நிலத்தில் கிருத்துவ தேவாலயம் : தமிழக அரசுக்கு சம்மன் அனுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


இந்து கோயிலுக்கு சொந்தமான இடத்தை வருவாய் ஆவணத்தில் புறம்போக்கு நிலம் என மாற்றி கிருத்துவ தேவாலயம் கட்டப்பட்டுள்ளது ! 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகாவில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் இந்து அறநிலையத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்கா சாலை துறை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தங்கள் கிராமத்தில் வசிக்கும் அனைவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். சமீபத்தில் கிருத்துவ மதத்தை சேர்ந்தவர்கள் குடியேறி இந்து  கோயில்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து இந்துக்கள் வழிபட அனுமதிக்க விடாமல் தடுத்துள்ளாக கூறப்படுகிறது. 

கோயிலுக்கு சொந்தமான நிலங்களை வருவாய் ஆவணங்களில் புறம்போக்கு நிலம் என மாற்றி கிராமத்தை சேர்ந்த சிலரின் உதவியுடன் தேவாலயம் கட்டியுள்ளனர். கோவிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளதை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே தான் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவானது பொறுப்பு தலைமை நீதிபதி எம் துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இம்மனும் மீது பதிலளிக்குமாறு அறநிலையத்துறை செயலாளர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்குமாறு சம்மன் அனுப்பி உள்ள நிலையில் இவ்வழக்கு இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு வரும் என தள்ளி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The place belonging to the Hindu temple has been converted


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->