மகளை வேலைக்கு போக கூடாது என கூறிய மருமகன்... மாமியார் துணிகரம்..! - Seithipunal
Seithipunal


மாமியாரே கூலிப்படை ஏவி மருமகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் அரவிந்தன் (30). இவர் அந்த பகுதியை சேர்ந்த மாலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  அரவிந்தன் அந்த பகுதியில் டிரைவராக வேலை செய்து வந்தார். மாலா அங்கு ப்யூட்டி பார்லர் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி அரவிந்தன் தென்காசி  அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பொன்னரசு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இருவர் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அரவிந்தனை அவரது மாமியாரே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரின் மாமியாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர், அளித்த வாக்குமூலத்தில் மருமகன் மகளை பார்லர் செல்ல கூடாது என கூறியுள்ளார். ஆனால், அவர் சரிவர வேலைக்கு செல்லததால் அவர் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

மகளிடம் பலமுறை மருமகனை விட்டு வரசொல்லியுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே மருமகனை கொலை செய்ய முடிவு செய்து கூலிப்படையை நாடியுள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The nephew's mother-in-law killed the mercenary avi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->