பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களை நடுவழியில் இறக்கிவிட்ட கேரள ரயில்வே அதிகாரி...! - Seithipunal
Seithipunal


தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களை ரயில் நிலையத்தில் இறக்கி விட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தமூன்று வீரர்கள் மற்றும் 2 வீராங்கனைகள் போல்வால்ட் பிரிவில் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் பவித்ரா என்ற வீராங்கனை தங்க பதக்கம் வென்று ஆசிய அளவிலான போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்க்க தகுதி பெற்றார். மேலும், மற்ற வீரர்களும் பதக்கம் வென்றனர். போட்டி முடிந்த பின்னர் சொந்த ஊர் திரும்புவதற்காக பயணச்சீட்டுடன் ரயில் நிலையத்தில் அமர்ந்தனர்.

அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் சுஜாதா அவர்கள் வைத்திருந்த விளையாட்டு உபகரணங்களை காரணம் சொல்லி நடுவழியில் உள்ள கொல்லம் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். அவர்கள் விளையாட்டு போட்டி பற்றி விபரம் கூறியுள்ளனர்.

ஆனால், அதனை கேட்காமல் வலுக்கட்டாயமாக ரயிலில் இருந்து இறக்கிவிட்டுள்ளார். இதுபற்றி அவர்கள் ரயில் நிலைய மேலாளர், ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து அவர்களை வேறொரு ரயிலில் அனுப்பி வைத்தனர். தமிழகம் சார்பில் தங்கம் வென்ற வீரர்கள் பாதியிலேயே அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Kerala Railway official who dropped the Tamil Nadu players who won the medal and returned midway


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->