திருப்பூர் || ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற விவசாயி! புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ்! - Seithipunal
Seithipunal


பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் விவசாயியை தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்திருக்கும் நாள் கூட்டம் காந்தி ஜெயந்தி நாளான நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய் பீம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

 அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு தம்பதியினர் திடீரென உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தீக்குளிக்க முயன்றது கூனம்பட்டியை சேர்ந்த சம்பத் மற்றும் அவரது மனைவி உமது மகேஸ்வரி என்பதை தெரியவந்தது.

மாவட்ட ஆட்சியரிடம் சம்பத் கொடுத்த மனதில் கூறியதாவது "கௌதமபாளையம் கிராமத்தில் எனக்கு ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. எனது விவசாய நிலத்திற்கு தென்புறமாக நல்லசாமி என்பவருக்கு விவசாய நிலம் உள்ளது. நல்லசாமி குடும்பத்தினர் அடிக்கடி எனது நிலத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து தகராறு செய்து வருகின்றனர். இதன் காரணமாக என் விவசாய நிலத்தில் கண்காணிப்பு கேமரா வைத்துள்ளேன். 

இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி எனது நிலத்தில் உள்ள 2 லட்சம் மதிப்புள்ள கல்லுக்கால் மற்றும் கம்பி வேலியினை உடைத்து நல்லசாமி மற்றும் அவர் குடும்பத்தினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நான் கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். இதன் அடிப்படையில் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனக்கும் என சொத்துக்கும் ஆபத்து உள்ளதால் நல்லசாமி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனதில் குறிப்பிட்டிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The farmer who will try to burning in thirupur collector office


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->