விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்.. கடிதத்தால் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


நட்சத்திர விடுதியில் விஷ செலுத்தி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவர் எழுதிய கடிதம் சிக்கியது.

சென்னை, ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றியவர் மகேஸ்வர். இவருடைய மனைவிக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டின் காரணமாக இவருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அறை எடுத்து தங்கியுள்ளார். அவரின்  நண்பர் அவரை நீண்ட நேரமாக தொடர்பு கொண்டு அவர் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்து அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றார்.

நீண்ட நேரம் கதவு தட்டியும் அவர் திறக்காததால் ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் அறையினுள் சென்று பார்க்கும் போது அவர் அசைவின்றி கிடந்துள்ளார். அவர் அருகில் விஷ ஊசி செலுத்தியதற்கான மருந்துகளும் இருந்தன.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், அவர் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, யாரையும் துன்புறத்த வேண்டாம் என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. குடும்ப தகராற்றால் அவர் தற்கொலை செய்து கொண்ட தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The fact that the letter from the doctor who committed suicide by injecting poison came out


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->