ஊர் திருவிழாவில் போடப்பட்ட வெடி! இரு மதத்தினர் இடையே பிரச்சினை வெடித்தது! - Seithipunal
Seithipunal


தேவாலய பகுதியில் வெடி வெடித்த வரை தட்டி கேட்டவரை தாக்கியதால் இருதரப்பினருக்கிடையே மோதல் உண்டாக்கியுள்ளது! 

நெல்லை மாவட்டம் இளையங்குடி பகுதியில் கோயில் கொடை விழா நடைபெற்றது. கோயில் திருவிழாவில் ஒரு பகுதியாக இன்று மதியம் மஞ்சள்படி ஊர்வலத்தின் போது புகழ்பெற்ற தூய கிருத்துவ ஆலயம் முன் வரும்போது கொடை விழா குழுவினரால் வெடி வெடித்ததாக கூறப்படுகிறது. அங்கு வெடி வெடித்ததை சிலர் தட்டிக் கேட்டுள்ளனர்.தட்டிக் கேட்டிய வரை விழா குழுவினர் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. 

தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். நீண்ட நேரமாக சாலை மறியல் நடைப்பெற்றதால் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நெல்லை மாவட்டம் எஸ்பி சரவணன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு உறுதி அளித்த பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். போலீசாரின் கடும் பாதுகாப்பிற்கு இடையே சாமி ஊர்வலம் நடைபெற்றது. கிருத்துவ தேவாலயம் முன்பு வரும்பொழுது எந்தவித வெடியும் மேளதாளமும் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்று முடிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The explosion in the village festival and The problem between two religions erupted!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->