பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டன. மாணவர்கள் தரவரிசை என்னை அறிய ஆர்வம்.!! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் 479 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்களுக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் சம வாய்ப்பு எண் கொடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றன.

இதில் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்ற, இதற்கு தகுதியான ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 150 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது.

Image result for kp anbazhagan

சென்னையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். அதில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்களும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரவிந்த், ஹரீஷ் பிரபு, பிரதீபா செந்தில் ஆகிய மூன்று பேர் 200 க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று சம வாய்ப்பு எண் அடிப்படையில் உள்ளனர்.

தரவரிசை எண்ணை குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044 - 2235 1014, 2235 1015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதை அடுத்து சிறப்புப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. 
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதியில் இருந்து  28ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the engineering course rankings list has been released.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->