காவல்துறையிடம் அதிகாரமாக பேசிய பெண்ணின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா.. வருத்தமடைந்த காவல்துறை.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், முகக்கவசம் அணியாமல் வந்த பெண்மணிக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டது. 

அவர் பணத்தை கட்ட மறுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரையும் தரக்குறைவாக பேசிய நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்த பெண் மீது தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. 

விசாரணையில், தஞ்சை மனோஜ்பட்டி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகள் சியாக்கி என்ற நந்தினி என்பது தெரியவந்துள்ளது. பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு சென்னையில் பணியாற்றி வந்த சியாக்கி என்ற நந்தினி, தற்போது தஞ்சாவூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

இந்த விஷயம் தொடர்பாக குடும்பத்தினர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஷியாக்கி குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பைபோலார் டிசார்டர் என்ற மருத்துவ நோயால் ஷியாக்கி பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ ஆவணங்களை குடும்பத்தினர் சமர்ப்பித்த நிலையில், சியாக்கி குறித்த உண்மை காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகளே பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், இது குறித்து ஷியாக்கியின் சகோதரர் ஆம்ஸ்ட்ராங், " தனது தங்கை மூன்று வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு கொரோனா பற்றி எதுவும் தெரியாது. முகக்கவசம் ஏன் அணிய வேண்டும்? சானிடைசர் எதற்கு பயன்படுத்த வேண்டும்? என்று கூட அவருக்கு தெரியாது. 

தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரை தனது தங்கை தவறாகப் பேசியதற்கு, நான் மற்றும் எனது குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம், எனது தங்கையை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்து விடுங்கள். எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் " என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Woman Atrocity with officers Shocking Sad Info Leaked 25 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->