#BREAKING : த​ஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்- தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை.! - Seithipunal
Seithipunal


அரியலூர்‌ மாவட்டம், வடுகப்பாளையத்தைச்‌ சேர்ந்த 17-வயது லாவண்யா என்ற சிறுமி தஞ்சாவூர்‌ மாவட்டம்‌, திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்‌ பட்டியில்‌ உள்ள தூய இருதய மேல்நிலைப்‌ பள்ளி என்னும்‌ தனியார்‌ பள்ளியில்‌ விடுதியில்‌ தங்கி பன்னிரெண்டாம்‌ வகுப்பு பயின்று வந்த நிலையில்‌ விடுதிக்‌ காப்பாளர்‌ அளித்த துன்புறுத்தலால்‌ மனஉளைச்சல்‌ ஏற்பட்டு களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் தமிழ்நாடு முழுவதும்‌ கடும்‌ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மாணவியின் தற்கொலைக்கு தூண்டிய பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் த​ஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. பிரியங்கா, கனூப், மருத்துவர் ஆனந்த்  உள்ளிட்ட நால்வர் குழுவினர் விசாரணை நடத்துகின்றனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடம் இன்று முதல் கட்ட விசாரணை நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur suicide case national commission for protection


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->