கொரோனா பரவல் காரணமாக தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு தடை..! - Seithipunal
Seithipunal


உலக புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஷ்வரர் ஆலயத்தில் 27 நாட்களுக்கு பிறகு மீண்டும் பக்தர்களுக்கு தடைவிதிக்கபட்டுள்ளது.

தஞ்சையில் உள்ள பெரிய கோவில் உலகபுகழ்பெற்றது. தமிழர்களின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்குகிறது. உலக பிரசத்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை காண தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருவர். 

கொரோனா ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டிருந்த தஞ்சை பெரியகோவில் சென்ற செப்டம்பர் மாதம் திறக்கபட்டது. தமிழகம் மற்றும் பிற மாநில பக்தர்களுக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கபட்டிருந்தது.

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பக்தர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜீன் மாதம் முதல் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கபட்டது. 

தற்போது, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், சுவாமிமலை முருகன் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்களுக்கு செவ்வாய் கிழமை வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. 27 நாட்களுக்கு பிறகு இந்த திடீர் அறிவிப்பால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Periya Kovil Peoples Visit Restricted till Next week due to Corona Pandemic 2 August 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->