சிக்கன் வாங்கி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல்.. பட்டுக்கோட்டையில் பகீர்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் தெரு பகுதியை சார்ந்தவர் சபிபுல்லா. இவர் தனது நண்பரின் பிறந்தநாளை முன்னிட்டு, பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் 3 கிரில் சிக்கன் மற்றும் சவர்மா போன்ற உணவுகளை பார்சலில் வாங்கியுள்ளார். 

பின்னர், இரவு 9 மணியளவில் தனது நபர்களிடம் எடுத்து சென்று மொத்தமாக சுமார் 13 பேர் உணவுகளை சாப்பிட்டுள்ளார். உணவுகளை சாப்பிட்ட 13 பேருக்கும் அடுத்தடுத்து திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அனைவரும் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக சபிபுல்லா தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்யவே, குறித்த நாளில் உணவு வாங்கிய பலருக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த பாதிக்கப்பட்டவர்கள் 7 பேர் உணவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவே, சபிபுல்லாவின் உறவினர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து விரைந்த காவல் துறையினர் புகார் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் வரும் வரை உணவகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு, உணவுத்தரகட்டுப்பட்டு அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் பேரில் கலைந்து சென்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Pattukkottai Hotel Food 20 Persons Affected Side Effect


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->