பிரதமரின் உயிர்காக்கும் விருதை பெற காத்திருக்கும் பட்டுக்கோட்டை காவல் அதிகாரி..! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமரின் உயிர்காக்கும் விருது கிடைத்தது தனக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என காவல் அதிகாரி ராஜ் கண்ணா தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தென்னமநாடு பகுதியை சார்ந்தவர் ராஜ் கண்ணா. இவர் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முதல்நிலை காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரண்யா. சரண்யா ஒரத்தநாடு காவல் நிலையத்தில் முதுநிலை காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் திவான் மற்றும் தீரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2015 ஆம் வருடத்தில் தஞ்சாவூர் ஆயுதப்படையில் காவல் அதிகாரியாக பணியாற்றுகையில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பாதுகாவலராக இருந்து வந்தார். 

இதன்போது, தென்னமநாட்டில் இருந்து தஞ்சாவூரில் இருக்கும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பணிக்கு செல்லும் வழியில், கல்லணை கால்வாயில் வேளாங்கண்ணிக்கு கால்நடை பயணம் செய்துகொண்டு இருந்த குடுமப்த்தை சார்ந்த சிறுவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டான். 

இதனை அனைவரும் வேடிக்கைபார்த்துக்கொண்டு இருக்க, காவல் அதிகாரி ராஜ் கண்ணா சற்றும் தாமதம் செய்யாமல் ஆற்றில் குதித்து சிறுவனை காப்பாற்றி இருக்கிறார். பின்னர், நனைந்த சீருடையுடன் காலதாமதமாக பணிக்கு செல்லவே, காவல் கண்காணிப்பாளரிடம் பணி தாமதத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். 

இதனைக்கேட்டு மெய் சிலிர்த்துப்போன காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் சன்மாமன்ம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் விருதுக்கு பரிந்துரை செய்ய கோரிக்கை வைக்கவே, அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுப்பையன் பிரதமரின் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதன்படி, கடந்த 2018 - 2019 ஆம் வருடம் உயிர்காக்கும் பிரதமரின் விருதுக்கு தகுதி உள்ளவர்களாக இந்தியா முழுவதும் 22 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து தஞ்சாவூரை சார்ந்த காவல் அதிகாரி ராஜ் கண்ணாவுக்கு விருது வழங்கப்படவுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக கருத்து தெரிவித்த காவல் அதிகாரி ராஜ் கண்ணா, " இந்த விருது தமிழக காவல்துறைக்கே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என அதிகாரிகள் தெரிவித்து மகிழ்ச்சியுற்றனர். தனது பணிக்கு சிறப்பை தேடித்தரும் விருதுகளால் எனக்கும் மகிழ்ச்சி தான். அனைத்து காவலர்களும் எந்த சமயத்திலும் மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Pattukkottai Constable Raj Kanna Selected Receive 2018 2019 Prime Minister award 5 July 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->