நடுரோட்டில் பட்டாகத்தியுடன் பரபரப்பு வீடியோ.. தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் புள்ளிங்கோஸ் அட்டகாசம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் பகுதியில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் நடுரோட்டில் இருந்து வாகனத்தை மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு மேலவூர் பகுதியை சார்ந்த 4 இளைஞர்கள் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. இந்த பதிவில், கூலிப்படை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் போல பின்னணி இசையையும் அவர்கள் சேர்த்துள்ளனர். 

சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனத்தை பட்டாக்கத்தியை காண்பித்து மிரட்டுவது போலவும், தங்களின் வாகனத்திற்கு மேல் வீராப்புடன் அமர்ந்துகொள்வது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும், மற்றொரு வீடியோவில் நகரின் பிரதான பகுதியில் பட்டாக்கத்தியை வைத்து ஓடுவது போலவும், ஒருவருக்கொருவர் அதனை வாங்குவது போலவும் பதிவாகியுள்ளது. 

இந்த விடியோவை பார்க்கையில், அவர்கள் அனைவரும் பக்கா புள்ளிங்கோக்கள் என்பது உறுதியாகியுள்ள நிலையில், இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அடுத்த அசம்பாவிதம் நடப்பதை காவல் துறையினர் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Orathanadu Youngsters Violent Video with Dangerous Materials 31 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->