குரங்குகளுக்கு வருடமெல்லாம் உணவளிக்கும் கூலித்தொழிலாளி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணையில் இருந்து திருச்சி செல்லும் வேங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே புளிய மரங்கள் அதிகளவு இருக்கிறது. இம்மரங்களின் குரங்குகள் வசித்து வரும் நிலையில், உணவுகளை தேடி சாலையில் அங்கும் இங்குமாய் சுற்றி திரிந்து வருகிறது. மேலும், பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தில், உணவுகள் கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும்.

இந்த விஷயத்தை வேங்கூர் கிராமத்தை சார்ந்த கூலித்தொழிலாளி நடராஜன் (வயது 59) என்பவர் அவ்வப்போது பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து பசியால் வாடும் குரங்குகளுக்கு உணவு வழங்க முடுய்வு செய்து, தனது மனைவியிடம் கலந்தாலோசித்துள்ளார். இதன்படி தினமும் வீட்டில் செய்யும் சாதங்களை பாத்திரத்தில் எடுத்து வந்து மரத்திற்கு கீழே வைத்து செல்கிறார். 

பின்னர் உணவை கண்டதும் குரங்குகள் விரைந்து வந்து சாப்பிட்டு, மீண்டும் மரத்தின் மீது ஏறி நின்றுகொண்டு விளையாடுகிறது. இவ்வாறாக கடந்த ஒரு வருடமாக குரங்குகளுக்கு உணவு வழங்கும் பணியில் நடராஜன் ஈடுபட்டு வருகிறார். மேலும், நடராஜனின் அன்பு செயலுக்கு பாராட்டுக்கள் செலுத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur monkey food


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->