கொரோனா மையத்திற்கு நடந்து சென்ற இளைஞர்.. உதவி செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரை சிகிச்சை மையத்தில் அனுமதி செய்யாமல், மூன்று கிலோ மீட்டர் தூரம் மருத்துவ ஊழியர்கள் அலைக்கழித்த நிலையில், காவல் ஆய்வாளர் உதவி செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் பாலுமகேந்திரா. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பெற கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கு படுக்கை வசதி இல்லை என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம், கோவிலச்சேரி கொரோனா முகாமிற்கு செல்லும்படி கூறி அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். அவசரஊர்தி வசதி கூட ஏற்படுத்தி கொடுக்க முன்வரவில்லை. இதனால் 3 கி.மீ தூரம் உள்ள கோவிலச்சேரி முகாமிற்கு பாலு மகேந்திரா நடந்து செல்ல முடிவு செய்துள்ளார். 

இதனையடுத்து அவர் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், அவரை இடைமறித்து காவல் நிலைய ஆய்வாளர் மணிவேல் விசாரணை மேற்கொண்டார். இதன்போது, மருத்துவமனை கொரோனா முகாமுக்கு செல்வது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தனியார் அவசர ஊர்தியை ஏற்படுத்திக் கொடுத்த காவல் ஆய்வாளர் மணிவேல், அவசர ஊர்திக்கு தனது சொந்த பணத்தை வழங்கி பாலு மகேந்திரா சிகிச்சை பெற கொரோனா மையத்திற்கு அனுப்பி வைத்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Kumbakkonam Mannargudi Inspector Help Corona Treatment youngster 26 May 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->